» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்தக்கோரி காங்கிரசார் பேரணி!
திங்கள் 2, செப்டம்பர் 2024 8:29:14 AM (IST)

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி நாகர்கோவில் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் நல்லிணக்க பேரணி நாகர்கோவிலில் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சோனி விதுலா தலைமை தாங்கினார். தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி சையத் அசீனா முன்னிலை வகித்தார். பேரணியில் விஜய்வசந்த் எம்.பி., ராபர்ட் புரூஸ் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணியானது டெரிக் சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு தொடங்கி பார்வதிபுரம் ராஜீவ்காந்தி சிலை முன் நிறைவடைந்தது. முன்னதாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி சையத் அசீனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ராகுல்காந்தி ஜோடோ யாத்திரை தொடங்கிய அன்றே பா.ஜனதா ஆட்சியின் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தார்கள். பா.ஜனதா அரசு மீண்டும் மீண்டும் பெண்களுக்கு எதிராக தனது சூழ்ச்சியை செயல்படுத்தி வருகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களின் பாதுகாப்புக்காக 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 3, ஜனவரி 2026 4:34:45 PM (IST)

தி.மு.க. ஆட்சியில்தான் கோவில் கும்பாபிஷேகம் அதிகளவில் நடத்தப்பட்டுள்ளது : சேகர்பாபு பெருமிதம்
வெள்ளி 2, ஜனவரி 2026 5:46:42 PM (IST)

குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம்!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:09:08 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 3:53:35 PM (IST)

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

