» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வந்தேபாரத் ரயிலுக்கு போதிய இணைப்பு ரயில் சேவை : பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

சனி 31, ஆகஸ்ட் 2024 10:13:50 AM (IST)

வந்தேபாரத் ரயிலுக்கு போதிய இணைப்பு ரயில் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு வாரத்துக்கு ஆறுநாள் வந்தேபாரத் ரயில் புதிதாக இயக்கப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவு துவங்கி விட்டது. இந்த ரயில் சென்னையிலிருந்து காலை 5:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 13:50 மணிக்கு நாகர்கோவில் வந்தடைகிறது. மறுமார்க்கமாக இந்த ரயில் நாகர்கோவிலிருந்து 14:20 மணிக்கு புறப்பட்டு 23:00 மணிக்கு சென்னை சென்றடைகிறது. 

இவ்வாறு கால அட்டவணையில் இயக்கப்படுவதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சென்னை செல்லும் முழு இரவு நேர ரயில்கள் கன்னியாகுமரி அல்லது அனந்தபுரி ரயிலில் இடம் கிடைக்காத பட்சத்தில் இந்த ரயிலில் மதியம் புறப்பட்டால் இரவே சென்னை சென்றுவிட முடியும். இது மாவட்டத்திலிருந்து சென்னையில் வசிக்கும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ரயிலின் பயணச்சீட்டு கட்டணம் விபரம்

நாகர்கோவில் - திருநெல்வேலி – 440.00 (ஏசி இருக்கை) - 830 ( ஏசி உயர்வகுப்பு இருக்கை)

நாகர்கோவில் - கோவில்பட்டி – 515 (ஏசி இருக்கை) - 985 ( ஏசி உயர்வகுப்பு இருக்கை)

நாகர்கோவில் - 735 (ஏசி இருக்கை) - 1405 ( ஏசி உயர்வகுப்பு இருக்கை)

நாகர்கோவில் - திண்டுக்கல் - 850 (ஏசி இருக்கை) - 1635 ( ஏசி உயர்வகுப்பு இருக்கை)

நாகர்கோவில் - திருச்சி - 1000 (ஏசி இருக்கை) - 1945 ( ஏசி உயர்வகுப்பு இருக்கை)

நாகர்கோவில் - விழுப்புரம் - 1510 (ஏசி இருக்கை) - 2775( ஏசி உயர்வகுப்பு இருக்கை)

நாகர்கோவில் - தாம்பரம் - 1700 (ஏசி இருக்கை) 3175 ( ஏசி உயர்வகுப்பு இருக்கை)

நாகர்கோவில் - சென்னை எழும்பூர்- 1735 (ஏசி இருக்கை) 3220 ( ஏசி உயர்வகுப்பு இருக்கை)

இந்த ரயிலில் மொத்தம் இரண்டு வகையான பெட்டிகள் சேர்த்து 1128 இருக்கைகள் உள்ளன. 

இணைப்பு ரயில் சேவை:

சென்னையிலிருந்து நாகர்கோவில் 13:50 மணிக்கு வந்து விட்டு நாகர்கோவிலிருந்து 90 நிமிடங்கள் கழித்து அதாவது மதிய உணவை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எடுத்துவிட்டு 15:32 மணிக்கு திருவனந்தபுரம் மார்க்கம் புறப்படும் கன்னியாகுமரி - புனலூர் பயணிகள் ரயிலில் எளிதாக இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம், கொல்லம் மார்க்கமாக செல்லும் பயணிகள் பயணம் செய்ய முடியும். 

இன்னமும் இந்த கன்னியாகுமரி – புனலூர் ரயிலை சிறிதளவு முன்னதாக புறப்படும் கால அட்டவணை மாற்றம் செய்தால் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும். இது சென்னையிலிருந்து நாகர்கோவில் பயணம் செய்யும் வந்தேபாரத் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதைப்போல் இந்த வந்தேபாரத் ரயில் நாகர்கோவிலிருந்து சென்னை மார்க்கமாக பயணிக்கும் போது மதியம் 14:20 மணிக்கு புறப்படுகிறது. ஆனால் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் மார்க்கம் பெங்களுர் - கன்னியாகுமரி ரயில் 13:50 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் கால அட்டவணையில் இயங்குகிறது. ஆனால் இந்த ரயில் பொதுவாக காலதாமதமாக இயங்கி வருகின்ற காரணத்தால் நம்பி வந்தேபாரத் ரயிலுக்காக இணைப்பு ரயில் என்று பயணம் செய்ய முடியாது. இந்த ரயிலுக்கு முன்பாக திருவனந்தபுரத்திலிருந்து 11:35 மணிக்கு திருச்சி இன்டர்சிட்டி ரயில் புறப்பட்டு நாகர்கோவில் டவுன் நிலையத்துக்கு 12:38 மணிக்கு வருகிறது. 

இந்த ரயில் சந்திப்பு ரயில் நிலையம் வராத காரணத்தால் இரணியல், பாறசாலை, நெய்யாற்றின்கரை ரயில் நிலையங்களில் நிறுத்தம் இல்லாத காரணத்தாலும் வந்தே பாரத் ரயிலுக்கு இணைப்பு ரயிலாக கருத முடியாது. ஆனால் இந்த இன்டர்சிட்டி ரயிலில் திருநெல்வேலி வரை பயணம் செய்து திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் - சென்னை வந்தேபாரத் ரயிலில் பயணம் செய்ய முடியும். இவ்வாறு பயணம் செய்வதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் வருவாய் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு செல்லும் நிலை உள்ளது.

எனவே தற்போது இயங்கும் ரயில்கள் கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

1. பெங்களுர் - கன்னியாகுமரி ரயிலை இன்னமும் வேகப்படுத்தி நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு மதியம் சுமார் 12:30 மணிக்கு வருமாறு இயக்க வேண்டும். சில நேரங்களில் சுமார் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக வந்தாலும் எளிதாக வந்தேபாரத் ரயிலை நாகர்கோவில் வந்து பயணம் செய்ய முடியும்.

2. கொல்லம் - கன்னியாகுமரி மெமு ரயிலை கால அட்டவணை மாற்றம் செய்து தற்போது நாகர்கோவில் வரும் 14:50க்கு பதிலாக 13:00 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கினால் அனைத்து சிறிய ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த மெமு ரயில் அனைத்து சிறிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி - சென்னை வந்தேபாரத் ரயிலுக்கு இணைப்பு ரயில்:

தற்போது கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இந்த திருநெல்வேலி – சென்னை வந்தேபாரத் ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்கு திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றம் செய்து நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்கலாம். இவ்வாறு பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து முன்பதிவு இருக்கை ஒதுக்கீடு பொது கோட்டவாகதான் இருக்கும் போது திருநெல்வேலி மாவட்ட பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்க போவதில்லை. யார் முதலில் முன்பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு கிடைக்கும்.

இணைப்பு ரயில் சேவை:

திருநெல்வேலி - சென்னை வந்தேபாரத் ரயில் திருநெல்வேலியிருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு இரவு 22:40 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த கால அட்டவணையில் இயங்கும் போது இந்த ரயிலுக்கு இணைப்பு ரயிலாக மதுரை – கோயம்புத்தூர் இன்டர்சிட்டி ரயிலை திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது கால அட்டவணை நாகர்கோவிலிருந்து காலை 4:00 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு காலை 5:20 மணிக்கு சென்று விட்டு அவ்வாறு மதுரை வழியாக கோவை செல்லும்

மறுமார்க்கமாக இந்த வந்தேபாரத் ரயில் திருநெல்வேலிக்கு 22:40 மணிக்கு வருகிறது. இந்த ரயிலுக்கு இணைப்பு ரயிலாக கோயம்புத்தூர் - மதுரை இன்டர்சிட்டி ரயில் மறுமார்க்கமாக தற்போது மதுரைக்கு 19:35 மணிக்கு வருகிறது. இந்த கோவை இன்டர்சிட்டி ரயில் நாகர்கோவில் நீட்டிப்பு பட்சத்தில் 23:00 மணிக்கு திருநெல்வேலி வந்தடைந்து 24:00 மணிக்கு அதாவது இரவு 12:00 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் இயக்கப்படும். இந்த கால அட்டவணையில் இயக்கப்படுவது என்பது பயணிகளுக்கு சிரமம்தான் இருந்தாலும் வேறு வழிகள் ஏதும் இல்லாத போது இவ்வாறு இயக்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory