» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டம்: 180 பேர் கைது!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 11:42:25 AM (IST)

தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
இந்திய மக்களுக்கு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து இடதுசாரிக்கட்சிகள் சார்பில் ஆக.1-ம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடியில் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்ததது.
மறியல் போராட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட 25 பெண்கள் உட்பட 75பேரை மத்திய பாகம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபோல் மத்திய அரசைக் கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகம்மது, மாவட்ட செயலாளர் (CPI-ML) முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், பேச்சிமுத்து, அப்பாத்துரை, சண்முகராஜ், ராஜா, இடைக்கமிட்டி செயலாளர்கள் சங்கரன், முத்து, முனியசாமி, ரவிதாகூர், கணபதி சுரேஷ், நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உட்பட 105 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

தலைமைAug 1, 2024 - 04:00:26 PM | Posted IP 162.1*****