» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆட்டோவில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : டிரைவர் கைது!
திங்கள் 29, ஜூலை 2024 12:42:47 PM (IST)
கருங்கல் அருகே ஆட்டோவில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவியின் தாய்-தந்தைக்கு திருமண நாள் ஆகும். எனவே, திருமண நாளை கொண்டாடுவதற்காக மாணவியின் பாட்டி வீட்டுக்கு செல்ல திட்டமிட்டனர்.
இதற்காக மாணவி உள்பட 3 பேரும் முள்ளங்கினாவிளை புளிச்சான்விளையை சேர்ந்தவர் ரசல் ராஜின் (54) ஆட்டோவில் மேல்மிடாலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். தெருவுக்கடை பகுதிக்கு சென்றபோது ஆட்டோவை நிறுத்துமாறு தம்பதி கூறினர். இதையடுத்து மாணவியின் தந்தை சவரம் செய்வதற்காக சலூன் கடைக்கு சென்றார். அதேபோல் தாயாரும் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் வாங்குவதற்காக சென்றுவிட்டார்.
அப்போது மாணவி மட்டும் ஆட்டோவில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ரசல்ராஜ் திடீரென மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கதறி அழுதார். சிறிது நேரத்துக்கு பிறகு வந்த தாயாரிடம் நடந்தவற்றை மாணவி கூறி அழுதுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், ஆட்டாே டிரைவரிடம் இதுபற்றி தட்டிக்கேட்டு கண்டித்து எச்சரித்தார்.
பின்னர், இதுகுறித்து மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் ரசல்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஆட்டோவுக்குள் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)
