» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குலசேகரம் - தக்கலை புதிய பேருந்து சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!
திங்கள் 8, ஜூலை 2024 4:16:33 PM (IST)

குலசேகரம் முதல் தக்கலை வரையிலான புதிய பேருந்து சேவையினை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவாட்டர் ஊராட்சி ஒன்றியம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் புதிய பேருந்து சேவையினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (08.07.2024) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கடைகோடி மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவற்றினை உடன்குடன் நிறைவேற்றி வருகிறார்கள். குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளில் பேருந்து வசதிகள் இல்லாத பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் குலசேகரம் முதல் தக்கலை வரையிலான புதிய பேருந்து சேவை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தானது குலசேகரத்திலிருந்து திருவட்டார், கட்டைக்கால், மாத்தூர், ஆனையடி,வெட்டுக்குழி வழியாக தக்கலை பேருந்து நிலையத்தினை சென்றடையும். பொதுமக்கள் இப்பேருந்து வசதியினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர், ஏற்றக்கோடு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். மேலும் மாத்தூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கான்வாடி மையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து கேட்டதோடு, குழந்தைகளுடன் உரையாடினார்கள். அத்தோடு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்திட தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கண்ணனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் ஜான் பிரைட், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், ஊராட்சி தலைவர்கள் ஹெப்சிபாய் ரோஸ் (ஏற்றக்கோடு), பால்சன் (குமரன்குடி). போக்குவரத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
திங்கள் 29, டிசம்பர் 2025 5:22:52 PM (IST)

சுசீந்திரம் தேரோட்ட திருவிழா: குமரி மாவட்டத்திற்கு ஜன.2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
திங்கள் 29, டிசம்பர் 2025 4:18:47 PM (IST)

நாகர்கோவில் பேருந்து நிலைய தபால்நிலையம் ஜனவரி 3ம் தேதி மூடல்!
சனி 27, டிசம்பர் 2025 4:11:51 PM (IST)

7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம்: நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 10:40:07 AM (IST)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்: 156 வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:28:21 PM (IST)

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம்: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:14:46 PM (IST)



.gif)