» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூய்மை பணியாளர்கள் முற்றுகை; போலீசார் குவிப்பு: தூத்துக்குடி மாநகராட்சியில் பரபரப்பு!

திங்கள் 8, ஜூலை 2024 7:52:53 AM (IST)



தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியை முற்றுகையிட்டனர். 

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசாணை படி நாள் தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-/ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். PF, ESI தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.. ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதிக்குள் வழங்கவும் அறிவிப்பு இல்லாமல் பண பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் போன்ற 19 கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர். 

மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 26, அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி சார்பில் கோரிக்கைகள்  நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் கடந்த 05.07.2024 அன்று அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாநகராட்சியின் இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.



இதையடுத்து தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தூய்மை பாரத ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் (AICCTU) சார்பில் தூய்மை பணியாளர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியை முற்றுகையிட்டனர். போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்த போராட்டம் கைவிடப்பட்டது  முன்னதாக போராட்டத்தை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு கண்ணீர் புகை குண்டு வாகனம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து

PEOPLESJul 9, 2024 - 03:57:18 PM | Posted IP 172.7*****

Abcd --- yes yes

AbcdJul 8, 2024 - 03:39:27 PM | Posted IP 172.7*****

, எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது போராட்டத்திற்கு ஆதரவு தருவோம் ஆளுங்கட்சியானவுடன் போராட்டத்தை ஒடுக்குவோம் இதற்கு பெயர் திராவிட மாடல் ஆட்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory