» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு!!!
சனி 6, ஜூலை 2024 4:24:43 PM (IST)
புதுக்கடை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம், புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் பகுதி நெடுவினையை சேர்ந்தவர் ஹபீஸ்பினு. இவர் இந்திய எல்லைப் படையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுரேகா (35). இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டு, சிசிட்சையில் இருந்து வந்துள்ளார். மேலும் தனியாக தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். கடைசியாக 3-ம் தேதி ஹபீஸ்பினுவின் தம்பி சுரேஷ் என்பவர் சுரேகாவை பார்த்துள்ளார்.
அதன் பிறகு சுரேகா வீடு பூட்டிய நிலையில், அவரை வெளியில் காணவில்லை. நேற்று சுரேகா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது, சுரேகா இறந்து, உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் உடலை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
