» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக தாரகை கத்பர்ட் பதவியேற்பு!
புதன் 12, ஜூன் 2024 12:03:25 PM (IST)

விளவங்கோடு இடைத்தேர்தல் வெற்றி பெற்ற காங்கிரஸின் தாரகை கத்பர்ட், சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
குமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக் இருந்த விஜயதரணி, பாஜக-வுக்கு சென்ற நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து காலியாக இருந்த விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல், மக்களவைத் தோ்தலுடன் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, காங்கிரஸ் தமிழக கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)
