» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நீட் தேர்வால் தூத்துக்குடி மாணவர்கள் கடும் பாதிப்பு : தனி கட் ஆப் வைக்க கோரிக்கை!
திங்கள் 10, ஜூன் 2024 12:40:45 PM (IST)

2024 நீட் தேர்வில் இந்தியா முழுவதும் எளிதான வினாத்தாள் அளிக்கப்பட்டு, தூத்துக்குடியில் மட்டும் கடினமான வினாத்தாள் அளிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ மாணவிகள் முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் அளித்துள்ள மனுவில், "2024 நீட் தேர்வில் இந்தியா முழுமைக்கும் இதுவரை இல்லாத வகையில் மிக மிக எளிய QRST வரிசை எண் கொண்ட வினாத்தாள் மூலம் நீட் தேர்வு 2024ல் நடந்த நிலையில் எங்களுக்கு மட்டும் மிக மிக கடினமான MNOP வரிசை எண் தெரிய வினாத்தாள் வழங்கப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக நாங்கள் முறையிட்டும் இதுவரை தேசிய தேர்வு முகமையால் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
தூத்துக்குடி அழகர் பப்ளிக் ஸ்கூல் தேர்வு மையத்தில் நீட் தேர்வை எழுதிய நாங்கள் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாலும், விடையளிக்க அதிக நேரம் செலவானதினாலும் எங்களால் அதிக மதிப்பெண் பெற இயலாமற் போய்விட்டது. எங்களது எதிர்காலமே எங்கள் கண்முன் இருண்டு காணப்படுகிறது. மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்களோடு நீட் தேர்ச்சி பெறுவதற்கு பணம் செலவு செய்து முன் முயற்சிகளை எடுத்து உழைத்த எங்களது பெற்றோர்களும் கண்ணீர் வடித்து நிற்கின்றனர்.
எங்களது மருத்துவர் கனவு கனவாகவே போய்விடுமோ? என்ற ஏக்கம் எங்களை வாட்டி வதைக்கிறது. எனவே, QRST மாடல் டைப் வினாத் தாள்களுக்கு தனி கலந்தாய்வு, தனிக் கட்ஆப் மார்க்கும், MNOP மாடல் வினாத்தாள்களுக்கு தனி கலந்தாய்வு தனி கட்ஆப் மார்க் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
JAIHINDJun 10, 2024 - 04:07:58 PM | Posted IP 162.1*****
பற்றி முழுமையாக அறிந்து கொண்டு கொண்டு, பேசுங்க அரை வேக்காடு மனிதர்களே.....அதைப்பற்றி தெரியாமலே உளர வேண்டியது.....
manithanJun 10, 2024 - 03:06:00 PM | Posted IP 162.1*****
முட்டா சங்கிகள் விளக்கமளிக்கவும்
ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போறாருJun 10, 2024 - 02:18:13 PM | Posted IP 162.1*****
அந்த நீட் ரகசியம் உதயநிதி கிட்டே இருக்கு 2029 தேர்தல் வரும்ல அப்போ ஒழித்து விடுவாரு.
மேலும் தொடரும் செய்திகள்

திருநங்கைகள் கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:57:09 PM (IST)

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

ரேகா சிவகுமார்Jun 12, 2024 - 11:10:17 AM | Posted IP 162.1*****