» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டின் கதவை உடைத்து 33‍ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

வியாழன் 6, ஜூன் 2024 3:55:41 PM (IST)

கன்னியாகுமரியில் வீட்டின் கதவை  உடைத்து 33 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் பெல்கியாஸ்(39). இவர் சவுதி அரேபியாவில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  இதனால் வீட்டை அவரது தம்பி பராமரித்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று அவர் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 33 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory