» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர் கைது: 34 பவுன் நகை மீட்பு!

புதன் 15, மே 2024 11:04:04 AM (IST)

குமரி மாவட்டத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்து, 34 பவுன் தங்க நகை 1125 கிராம் வெள்ளியை மீட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் ஆரல்வாய்மொழி  பூதப்பாண்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டிய வீட்டை உடைத்து நகைகளை திருடி சென்றதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திசையன் விளையை சேர்ந்த தவசிப்பால் என்பவரை விசாரித்ததில் திருட்டில் ஈடுபட்ட நபர் என்று தெரியவந்தது. இவர் மீது ஆரல்வாய் மொழி பூதப்பாண்டி கோட்டார் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது.  போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 34 பவுன் தங்க நகை 1125 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து

Ponmariappanமே 15, 2024 - 11:16:36 AM | Posted IP 162.1*****

குமரி மாவட்டத்தில் வீடுகளின் பூட்டை நகைகளை (Can you read this,kindly update clearly)

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory