» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்ட ஐடிஐ-க்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 14, மே 2024 12:11:15 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2024-ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் (SMRV), நாகர்கோவில் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சேரவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் (SMRV) மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தொகையான ரூ.50 டெபிட், கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங், ஜிபே வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 07.06.2024 ஆகும்.
8-ம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் (ளுஆசுஏ) மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்துக்கு நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப் புத்தகங்கள் வரைபடக்கருவிகள், சீருடை காலணி, பயிற்சிக்கு தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது
சனி 13, செப்டம்பர் 2025 11:44:13 AM (IST)
