» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி ரொக்கம், ரூ.1.03 கோடி தங்கம் பறிமுதல்!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 5:53:46 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் இது வரை ரூ.2.50 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1.03 மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி ஒன்றுக்கு 3 எண்கள் பறக்கும் படைகள் வாரியாக பறக்கும் படைகள் 18 எண்களும், நிலையான கண்காணிப்பு படைகள் 18 எண்களும் கூடுதல் பறக்கும் படைகள் 36 எண்களும், கூடுதல் நிலையான கண்காணிப்பு படைகள் 36 எண்களும் இம்மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள் செயல்பட்டு வருகிறது.
இது தவிர 6 எண்கள் வீடியோ கண்காணிப்பு படைகளும் செயல்பட்டு வருகிறது. மேற்படி பறக்கும் படை குழுவினரால் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ.2,50,35,270/- மற்றும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்கம், வெள்ளி பொருட்கள் மதிப்பு ரூ.1,03,25,871/- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அச்சக முகவரி மற்றும் அனுமதியில்லாமல் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தேர்தல் விதிமீறல் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

