» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 11:59:37 AM (IST)
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் தென் மாவட்டங்களில் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அநேக இடங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னனுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.