» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹோலி கிராஸ் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:34:38 AM (IST)நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி சார்பில் தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

"இந்திய அரசின் போதை இல்லாத இந்தியா" திட்டத்தின் கீழ் ஹோலி கிராஸ் கல்லூரியும், திருப்புமுனை போதைநோய் நலப்பணியும் ,கன்னியாகுரி மாவட்ட சமூக நலத்துறையுடன் இணைந்து நடத்தும் 100 மணிநேர "நடத்தை மாற்றுதல்" 20 வார பட்டயப் பயிற்சி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடந்து வருகிறது. 18 வது வகுப்பானது சுற்றுலா வகுப்பாக நடந்தது.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு சிறப்பு பேருந்து புறப்பட்டு அண்ணா பேருந்து நிலையம், சுசீந்திரம், கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி வந்தது. கன்னியாகுமாரி அஞ்சுகூட்டுவிளையில் உள்ள கென்சன் கலையரங்கில் வைத்து நடந்தது. பயிற்சியை வளர்இளம்பருவ நிபுணர் மற்றும் ஆலோசகர் கிரேஸ் குணபால் வளரிளம் பருவம் குறித்து சிறப்பு வகுப்பு நடத்தினார்கள்.

இன்றைய வகுப்பில் சுமார் 300 பயிற்சிபெறுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பின்னர் குழு ஆய்வும், கலந்துரையாடலும் நடந்தது. தேர்தலில் 100% வாக்களிக்கப்பட, பயிற்சிபெறுநர்கள் எல்லோரும் ஓட்டுப் போடுவதாகவும், அதற்காக தன்னார்வப்பணி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
இன்றைய சுற்றுலா தின வகுப்புக்கான ஏற்பாட்டை பயிற்சியின் இயக்குநர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் சிறப்பாக செய்திருந்தார்கள். 

பேருந்திற்கான ஏற்பாட்டை நாகர்கோவில் போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜேரோலின் லிஸ்பன் சிங் செய்திருந்தார். இருபது வார வகுப்புகள் நிறைவில் பங்கேற்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர், சமூக நலத்துறை அதிகாரி மற்றும் கோட்டார் மறைமாவட்ட ஆயர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பயிற்சியில் தேர்ச்சி பெற்றதற்கான டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் திருப்புமுனை போதைநோய் நலப்பணி, நடத்தை மாற்றுதல் பட்டய பயிற்சி இயக்குநர் நெல்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory