» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பறக்கும் படையினர் வாகன சோதனை : குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு!

புதன் 3, ஏப்ரல் 2024 4:12:31 PM (IST)கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், ஆலோசனை வழங்கினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (03.04.2024) கன்னியாகுமரி பாராளுமன்றத்திற்குட்பட்ட கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மண்டல அலுவலர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, குறிப்பிட்ட நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று அந்த இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை சோதனை செய்வது, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து படிவங்களும் உள்ளதா என்பதை சரிபார்ப்பது, மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது கண்காணிக்க வேண்டும் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தேவையான மின்கலன் (பேட்டரி) உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மண்டல அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.

முன்னதாக அவர் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட செல்பவர்களும், வருகை பதிவேட்டினை பார்வையிட்டதோடு, வாக்குச்சாவடிகளில் அனுப்பி வைக்கப்பட உள்ள படிவங்கள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்தார்கள். மேலும் வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்களால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான வாகன ஒத்துகை நிகழ்ச்சியினை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பாலுர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அலுவலர்களுடன் கேட்டறிந்தார். நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கிள்ளியூர் சட்டமன்ற உதவி தேர்தல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) லொரைட்டா, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory