» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போக்குவரத்துக்கு இடையூறாக பிரச்சாரம் : நடிகர் சிங்கமுத்து மீது வழக்கு!

புதன் 3, ஏப்ரல் 2024 11:15:33 AM (IST)

குமரி தொகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக பிரசாரத்தில் ஈடுபட்டதாக நடிகர் சிங்கமுத்து உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி காந்திநகர் பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இன்றி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நடிகர் சிங்கமுத்து உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணவாளக்குறிச்சி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்திற்கு ஆதரவாக 5000 நோட்டீஸ்கள் இருந்தது தெரியவந்தது. அந்த நோட்டீசுகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பறக்கும் படை அதிகாரி சுனில் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளருமான சாந்தினி பகவதியப்பன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory