» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் ரூ.1கோடி ரொக்கம், ரூ.1.40கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்!
சனி 30, மார்ச் 2024 12:06:48 PM (IST)
குமரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1கோடி ரொக்கம், மற்றும் ரூ.1.40கோடி மதிப்பு தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி ஒன்றுக்கு 3 எண்கள் பறக்கும் படைகள் வாரியாக பறக்கும் படைகள் 18 எண்களும், நிலையான கண்காணிப்பு படைகள் 18 எண்களும் கூடுதல் பறக்கும் படைகள் 36 எண்களும், கூடுதல் நிலையான கண்காணிப்பு படைகள் 36 எண்களும் இம்மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள் செயல்பட்டு வருகிறது. இது தவிர 6 எண்கள் வீடியோ கண்காணிப்பு படைகளும் செயல்பட்டு வருகிறது. மேற்படி பறக்கும் படை குழுவினரால் 29.03.2024 மு.ப. 6.00 மணி முதல் 30.03.2024 அன்று மு.ப 6.00 வரை ரூ.3,52,000/- ம் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ.1,03,37,507/- மற்றும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்கம், வெள்ளி பொருட்கள் மதிப்பு ரூ.1,40,00,000/- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் அச்சக முகவரி மற்றும் அனுமதியில்லாமல் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தேர்தல் விதிமீறல் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)

137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பாதுகாப்பு குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 12:48:58 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளால் வணிகம் பாதிப்பு: போராட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு!
வியாழன் 26, மார்ச் 2026 12:09:02 PM (IST)

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வாகன சோதனை : தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 12:00:39 PM (IST)

பொய்கைக் காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்!
புதன் 25, மார்ச் 2026 5:17:39 PM (IST)

