» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெற்ற தாயை குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன்.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்

செவ்வாய் 20, பிப்ரவரி 2024 11:37:56 AM (IST)நித்திரவிளை அருகே பெற்ற தாயை தாக்கி குழிக்குள் தள்ளி மகன் கொல்ல முயன்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டு பின்புறத்தில் மூதாட்டி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூத்த மகன், அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் திடீரென அங்கிருந்த ஒரு குழிக்குள் தள்ளிவிட்டார். 

பின்னர் அங்கு கிடந்த ஒரு கட்டையை எடுத்து தாயாருக்கு மிரட்டல் விடுத்து சென்றார். மேலும் மகனின் தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மகன், தாய் தகராறு சம்பவத்தை இளைய மருமகள் தட்டிக்கேட்டதோடு அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory