» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காங்கிரஸ் தலைமை சமரசம்: பாஜகவில் இணையும் திட்டத்தை கைவிட்ட விஜயதரணி!
திங்கள் 19, பிப்ரவரி 2024 10:59:29 AM (IST)
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமரசம் எதிரொலியாக பாஜகவில் இணையும் திட்டத்தை விஜயதரணி கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்ற காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, சட்டப்பேரவை கட்சி கொறடாவாக உள்ளார். இவர் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், குறைந்தபட்சம் பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியாவது வேண்டும் என்றும் தலைமையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. வசந்தகுமார் மறைந்த போதே இடைத்தேர்தலில் போட்டியிட விஜயதரணி விரும்பியதாக தெரிகிறது.
தற்போதும் கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் விஜய் வசந்த்துக்கே வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுறது. இதையறிந்த விஜயதரணி அதிருப்திக்கு உள்ளாகி, பாஜகவின் கதவை தட்டுவதற்காக டெல்லி சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவரை தொடர்புகொண்ட செல்வப்பெருந்தகை சமாதானப் படுத்தியதாகவும், அதனால் மனமாற்றம் அடைந்து பாஜகவில் இணையும் திட்டத்தை கைவிட்டு இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கந்தசாமிFeb 23, 2024 - 01:57:03 PM | Posted IP 172.7*****