» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குழந்தைகளுக்கான குறும்படங்கள்: அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்!

திங்கள் 12, பிப்ரவரி 2024 4:23:35 PM (IST)குழந்தைகள் பெற்றோருடன் குடும்பமாக வளர்வதன் முக்கியத்துவத்தை பற்றியும், வளர்ப்புப் பராமரிப்பு சேவையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்டுள்ள "விதை” மற்றும் "நிழல்" ஆகிய இரு குறும்படங்களை அமைச்சர் பி. கீதா ஜீவன் வெளியிட்டார். 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்புத்துறை, யூனிசெப் (UNICEF) மற்றும் சியாப் (SIAPP) அமைப்பும் இணைந்து குழந்தைகள் பெற்றோருடன் ஒரு குடும்பமாக வளர்வதன் முக்கியத்துவத்தை பற்றியும், வளர்ப்புப் பராமரிப்பு சேவையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் குடும்ப அமைப்பில் வளர்வதை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள "விதை” மற்றும் "நிழல்" ஆகிய இரு குறும்படங்களை சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், வெளியிட்டார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசுச் செயலாளர்  ஜெயஸ்ரீ முரளிதரன்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர்  இரா.சீதாலட்சுமி,  இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் மற்றும் சியாப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்  சியாமளா நடராஜ், திட்ட இயக்குநர்  கே.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory