» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
டிசிடபிள்யூ சார்பில் மெகா இலவச மருத்துவ முகாம்
சனி 10, பிப்ரவரி 2024 4:56:20 PM (IST)

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் தலைவன்வடலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மெகா இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் தலைவன்வடலியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மெகா இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஆத்தூர் சங்கர் மருத்துவமனை டாக்டர் மாலதி பத்மநாபன், டாக்டர் ஒலிமுத்து, காயல்பட்டணம் கேஎம்டி மருத்துவமனை டாக்டர் காதர் பாஷா, திருச்செந்தூர் ஸ்ரீ அம்பிகை ஆர்த்தோ மருத்துவமனை டாக்டர் பார்த்தசாரதி, திருச்செந்தூர் எடிஷன் மருத்துவமனை டாக்டர் ஜெஃப் ரெட்லின், டிசிடபிள்யூ டாக்டர் சண்முகம், மற்றும் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை, எலும்பு சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம் இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தலைவன்வடலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 154 பேர் பயனடைந்தனர். டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனத்தின் மூத்த நிர்வாக துணைத் தலைவர் ஜி. சீனிவாசன் மற்றும் தலைவன்வடலி கிராமத்தின் பிரதிநிதிகள் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

KumarFeb 10, 2024 - 05:45:14 PM | Posted IP 172.7*****