» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நெகிழி பயன்பாட்டினை தடை: அமைச்சர் அறிவுறுத்தல்

சனி 10, பிப்ரவரி 2024 4:37:15 PM (IST)கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நெகிழி பயன்பாட்டினை தடை செய்ய வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவுறுத்தல் அறிவுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), நெடுஞ்சாலைத்துறை, உட்பட பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, ஒவ்வொரு துறைக்கும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

ஒவ்வொரு வீடுகளிலும் 6 அடி உறிஞ்சு குழிகள் அமைக்கவும், குப்பைகள் மற்றும் திடக்கழிவுகளை உரமாக மாற்றவும், சிறிய அளவு நெகிழிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பாலித்தீன் பைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, அபராதம் விதிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நகராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும், நெடுஞ்சாலைகள் துறை சார்பில் நடைபெற்றுவரும் சாலைப்பணிகள், பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கட்டடம், கடலரிப்பு தடுப்புக்கோட்டம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்திடவும், குளங்களை தூர்வாரி, கரைகளை கட்ட வேண்டுமெனவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்படின் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், பொதுப்பணித்துறை (கட்டிடம்) செயற்பொறியாளர் வெள்ளைசாமி ராஜ், உதவி இயக்குநர்கள் விஜயலெட்சுமி (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்), நகராட்சி ஆணையர்கள் உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory