» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மார்த்தாண்டம் மேம்பால சாலை சீரமைக்கும் பணி : ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு
சனி 10, பிப்ரவரி 2024 11:50:17 AM (IST)
மார்த்தாண்டம் மேம்பால சாலை சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக செல்லும் சாலைகள் பழுதடைந்துள்ளதாகவும், அச்சாலைப் பகுதிகளை சீரமைத்திட பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் உடனடி நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.50 இலட்சம் மதிப்பில் மேம்பால பகுதி சாலை சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இவ்வாய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.