» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் 45 ஆண்டுகளுக்கு பின் சாலை அமைப்பு - மாநகராட்சிக்கு பாஜக பிரமுகர் நன்றி!

சனி 10, பிப்ரவரி 2024 10:03:19 AM (IST)தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் சாலை அமைத்துக் கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாஜக பிரமுகர் நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பாஜக பிரமுகர் ஆர்.காசிலிங்கம் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் டூவிபுரம் 10வது தெரு சந்து பகுதியில் சுமார் 45 ஆண்டு காலம் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். 

இது தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பு மக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடமும் மனு அளித்திருந்தேன். தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

RaveendranFeb 12, 2024 - 01:21:37 PM | Posted IP 172.7*****

Sir it Gheethajevan mla fund ur news fake this problem solved by area ccouncilar

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory