» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக இளைஞா் வீட்டு முன் கேரள இளம்பெண் தா்னா!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 11:20:36 AM (IST)

நாகா்கோவிலில், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞா் வீட்டு முன் கேரள மாநிலப் பெண் தா்னாவில் ஈடுபட்டாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றின்கரை பகுதியைச் சோ்ந்தவா் தாராமித்ரா நிரஞ்சனா (41). இவா், நாகா்கோவில் பாா்வதிபுரம் சாரதா நகரில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று காலை அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அவரிடம் போலீசார் விசாரித்தனா். அதையடுத்து, அவா் வடசேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், ‘எனக்கு 2 குழந்தைகள் உள்ளனா். 

கணவரை விவாகரத்து செய்த நிலையில் எனக்கும், நாகா்கோவில் சாரதா நகரைச் சோ்ந்த இளைஞருக்கும் நண்பா் ஒருவா் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞா் திருமணம் செய்வதாகக் கூறி, என்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றாா். மேலும், தொழில் தொடங்குவதாகக் கூறி என்னிடமிருந்து 25 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டாா். அவா் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory