» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)

ஜப்பானைக் கடுமையாகத் தாக்கிய 'டால்பின்' சூறாவளிப் புயல் தற்போது சீனாவை நெருங்கியுள்ளதால், ஷாங்காய் நகரில் 80 சதவீத விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஜப்பானில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஜூலை 28-ல் 'டால்பின்' சூறாவளிப் புயலாக வலுவடைந்தது. ஜப்பானின் ஒகினவா மற்றும் ஆமமி தீவுகளை இப்புயல் கடுமையாகத் தாக்கியதில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
புயலின் போது மணிக்கு 162 கி.மீ. முதல் அதிகபட்சமாக 216 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதால், 5 பேர் படுகாயமடைந்தனர். அசாதாரண சூழ்நிலை காரணமாகத் துறைமுகங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் உடனடியாக மூடப்பட்டன.
சீனாவில் 'ரெட் அலர்ட்'
ஜப்பானைக் கடந்த டால்பின் சூறாவளி, சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணக் கடற்கரையில் கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. யூஹுவான் மற்றும் வென்லிங் நகரங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஷாங்காய் நகருக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக ஷாங்காய் நகரில் 80% (2,230 விமானங்கள்) சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை மேலும் 720 விமானங்கள் ரத்து செய்யப்படவுள்ளன. ஹாங்சவ், நிங்போ லிஷே மற்றும் வென்ஜவ் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் முற்றிலுமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன. வரும் புதன்கிழமை வரை சுமார் 44 விமான நிலையங்கள் இப்புயலால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காயில் ரயில் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டின் மிகச்சக்தி வாய்ந்த சூறாவளியாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது. கடந்த மாதம் சீனாவைத் தாக்கிய 'பவி' சூறாவளியை விட, இப்புயல் 40 மடங்கு அதிக மழைப்பொழிவையும் வெள்ளப் பெருக்கையும் ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)

தாய்லாந்து பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:33:44 PM (IST)

95 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை: பிரிட்டன் பூங்காவில் உலக சாதனை படைத்த அரிய பறவை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:23:54 PM (IST)

நிலவில் மோதியது 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் பாகம்: பூமிக்கு ஆபத்தா? நாசா விளக்கம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:56:22 PM (IST)


