» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நிலவில் மோதியது 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் பாகம்: பூமிக்கு ஆபத்தா? நாசா விளக்கம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:56:22 PM (IST)

நிலவின் மேற்பரப்பில் சுமார் 4 டன் எடை கொண்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் பாகம் பலமாக மோதியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 'நாசா' மற்றும் இந்தியாவின் 'இஸ்ரோ' போன்ற அரசு விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'ஃபால்கன் 9' (Falcon 9) ராக்கெட்டின் பூஸ்டர் பாகம் பூமிக்குத் திரும்பிய நிலையில், அதன் மேல் பகுதி விண்வெளியிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த 4 டன் எடை கொண்ட ராக்கெட் பாகம், இந்திய நேரப்படி புதன்கிழமை அன்று நிலவின் மேற்பரப்பில் அதிவேகமாக மோதியது. இந்த மோதலால் நிலவில் மிகப்பெரிய பள்ளம் (Crater) ஏற்பட்டிருக்கக்கூடும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
பூமிக்கு பாதிப்பு உண்டா?
ராக்கெட் பாகம் நிலவில் மோதிய சம்பவம் விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இருப்பினும், இதனால் பூமிக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று நாசா செய்தித் தொடர்பாளர் ஜிமி ரஸல் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மோதல் நடந்த இடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துத் துல்லியமாக அறிய ஆய்வுகளும் புகைப்படங்களும் அவசியமாகின்றன. நிலவில் ராக்கெட் மோதிய இடத்தைக் கண்டறியும் பணியில் அமெரிக்காவின் நாசா (NASA) இறங்கியுள்ளது. நிலவைச் சுற்றி வரும் தென்கொரியாவின் விண்கலமும் இந்தத் தேடுதல் பணியில் இணைந்துள்ளது.
புகைப்படங்கள் மற்றும் தரவுகள் கிடைக்கச் சில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், 'விண்வெளிக் குப்பைகள்' (Space Debris) பூமியின் சுற்றுவட்டாரத்திலும் நிலவுப் பகுதியிலும் அதிகரிப்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகின் இளம் பேராசிரியராக 18 வயதில் சாதனை : அமெரிக்க இளைஞருக்கு குவியும் பாராட்டு!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:46:30 AM (IST)

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)


