» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைனின் முக்கிய நகரைக் கைப்பற்றியது ரஷ்யா: புதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 4, ஜூலை 2026 3:35:07 PM (IST)

உக்ரைன் நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான கோஸ்டியான் டினிவ்கா நகரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கொண்டு தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா ஒரே இரவில் 74 ஏவுகணைகள், 496 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 48 ஏவுகணைகளையும் 476 ட்ரோன்களையும் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. எஞ்சிய 25 அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளும் 12 ட்ரோன்களும் நகரின் முக்கியப் பகுதிகளில் விழுந்து வெடித்ததாகவும் உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனின் கோஸ்டியான் டினிவ்கா நகரைக் ரஷ்யப் படைகள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள மிக முக்கிய உத்தேசப் பகுதியைக் கைப்பற்றியுள்ள ரஷ்யப் படைகள், அங்கிருந்து அடுத்தகட்ட இலக்குகளை நோக்கி மேலும் தீவிரமாக முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்பு உக்ரைன் தரப்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)

எச்-1பி விசா கட்டணம் 98 லட்சமாக அதிகரிக்கத் திட்டம்: அமெரிக்க அதிபருக்குப் பரிந்துரை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:09:21 PM (IST)

கினியாவில் கனமழையால் குப்பை மலை சரிந்து 30 பேர் உயிரிழப்பு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:45:05 PM (IST)

வங்கதேசத்தில் இந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்துடன் படுகொலை: 2 பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:17:30 PM (IST)

இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்: 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:41:34 PM (IST)

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் பகுதி: டிரம்ப் அறிவிப்பால் நீடிக்கும் பதற்றம்!!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:46:27 AM (IST)


