» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உகாண்டா அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி
ஞாயிறு 18, ஜனவரி 2026 12:16:51 PM (IST)

உகண்டா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் முசேவேனி தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
உகாண்டாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான யோவேரி முசேவேனி 71.65 சதவிகித வாக்குகளைப் பெற்று, 7-வது முறையாக மீண்டும் அதிபராக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 43 வயதான பாபி வைன் 24.72 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார்.
1986இல் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, யோவேரி முசேவேனி அதிபராகப் பதவியேற்றார். முசேவேனியின் தேசிய எதிர்ப்பு இயக்கக் கட்சி, வயது மற்றும் பதவிக்கால வரம்புகளை நீக்க அரசியலமைப்பை பல முறை மாற்றியதன் மூலம் முசேவேனியின் பதவியும் தக்கவைக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:53:28 PM (IST)

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
திங்கள் 9, மார்ச் 2026 11:38:21 AM (IST)

ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை
ஞாயிறு 8, மார்ச் 2026 8:56:43 PM (IST)

வளைகுடா நாடுகளைத் தாக்க மாட்டோம்: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உறுதி
சனி 7, மார்ச் 2026 5:53:56 PM (IST)

அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி கேட்க வேண்டும்! - ஈரானின் அதிரடி கோரிக்கை!
சனி 7, மார்ச் 2026 11:47:53 AM (IST)

ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்கள் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி!
வெள்ளி 6, மார்ச் 2026 12:17:23 PM (IST)

