» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!

சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றினேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/trumpsuprem_1768029278.jpgஇந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறினார். ஆனால் அவரது பேச்சை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், 1 கோடி உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் தனக்கு நன்றி கூறினார் என்று டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு 

பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது; "பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்கு வந்தபோது, வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1 கோடி பேரின் உயிர்களை காப்பாற்றியதற்காக அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

போர்களை தடுத்து நிறுத்தியது குறித்து நான் விளம்பரம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதே சமயம், போரை வேறு யாரும் தடுத்து நிறுத்தவில்லை. வரலாற்றில் நோபல் பரிசை பெறுவதற்கு என்னை விட தகுதி வாய்ந்த வேறு ஒரு நபர் இருக்க முடியாது என நினைக்கிறேன்.

மக்களுக்கு என்னை பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி. நான் 8 பெரிய போர்களை நிறுத்தியுள்ளேன். அவற்றில் சில போர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தன. இந்தியா-பாகிஸ்தான் போல் சில போர்கள் சமீபத்தில் தொடங்கின. அந்த போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், நான் அவசர உத்தரவுகள் மூலம் போரை நிறுத்தினேன். கோடிக்கணக்கான உயிர்களை நான் காப்பாற்றினேன். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory