» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!

வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)



இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டுகிறார். மேலும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்ததாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

ஆனால், இதுதொடர்பாக எந்தவித உரையாடலும் நடக்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த வாரமே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எக்ஸ் தளத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory