» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது நாட்டுக்கே அவமானம்: ட்ரம்ப் வேதனை!
வெள்ளி 3, அக்டோபர் 2025 12:30:25 PM (IST)
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப், "எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத யாரோ ஒருவருக்கு அதை கொடுப்பார்கள். அமைதிக்கான நோபல் விருது எனக்கு தரப்படாவிட்டால் அது நம் நாட்டுக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும். எனக்கு அது வேண்டாம், நாடு அதைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம் நாட்டுக்கு அது கிடைக்க வேண்டும்.யுத்தங்கள் எதுவும் முடியவே முடியாது என்று பலரும் சொன்னார்கள். 31 ஆண்டுகள் வரை சில போர்கள் நீடித்தன. ஒரு போர் 36 ஆண்டுகள் நீடித்தது. ஆனால் நான் ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். அவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியாவனன்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார். வரும் 10ஆம் தேதி நோபல் பரிசுகள் பெறுவோர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் ட்ரம்பின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)


.gif)