» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு

செவ்வாய் 15, ஜூலை 2025 4:08:45 PM (IST)



சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். 

சீன அதிபருடனான தனது இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று காலை பெய்ஜிங்கில் அதிபர் ஜி ஜின்பிங்கை எனது சக எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்களுடன் சந்தித்தேன். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். 

நமது இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து அதிபர் ஜி ஜியிடம் விளக்கினேன். அந்த வகையில் நமது தலைவர்களின் வழிகாட்டுதலை மதிக்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் சீன பயணத்தைத் தொடர்ந்து தற்போது ஜெய்சங்கர் சீனா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory