» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனாவில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், சீன அமைச்சர் டோங் ஜூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது எல்லை பிரச்சினையை தீர்க்கவும், இரு நாட்டு உறவை மேம்படுத்தவும் 4 அம்ச திட்டங்களை ராஜ்நாத்சிங் பரிந்துரைத்தார்.
இந்நிலையில் இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: எல்லை நிா்ணயம் மற்றும் மேலாண்மை தொடா்பாக இந்தியாவுடன் தொடா்ந்து பேச்சுவார்த்தைக்கு சீனா எப்போதும் தயாராக உள்ளது. இதன்மூலம் இரு தரப்பும் சோ்ந்து எல்லையில் அமைதியை உறுதிப்படுத்தவும், எல்லைத் தாண்டிய ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கவும் முடியும்.
சீனா-இந்தியா இடை யேயான எல்லைப் பிரச்சினை சிக்கலானது. அதைத் தீர்க்க நேரம் எடுக்கும். இதில் முன்னேற்றம் என்னவென்றால் இரு நாடுகளும் ஏற்கனவே முழுமையான தகவல்தொடர்புக்கான பல்வேறு மட்டங்களில் வழி முறைகளை நிறுவியுள்ளன.எல்லையில் அமைதியைப் பேண இரு நாடுகளும் ஒரே திசையில் செயல்பட்டு, தொடா்ந்து தொடா்பில் இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இரு தரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத் தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன என்பது நினைவிருக்கலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் நோக்கம் அமைதியை நோக்கியது : ஷெபாஸ் ஷெரீப்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:51:16 PM (IST)

நெட்பிளிக்ஸ் மொத்த படமும் நொடியில் டவுன்லோடு : இணைய வேகத்தில் ஜப்பான் உலக சாதனை!!
சனி 12, ஜூலை 2025 5:32:49 PM (IST)

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)

பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)

விசா இல்லாமல் பயணிக்க 74 புதிய நாடுகளுக்கு சீனா அனுமதி : பட்டியலில் இந்தியா இல்லை!!
புதன் 9, ஜூலை 2025 11:45:34 AM (IST)
