» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்: ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 12:14:10 PM (IST)
ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.

போருக்குப் பின் முதல் முறையாக இருநாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான உக்ரைன் தூதுக்குழு, ஜனாதிபதி உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷிய குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். 2 மணி நேரம் சந்திப்பு நடந்தது. இரு தரப்பினரும் அதிக எண்ணிக்கையில் கைதிகள் பரிமாற்றத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதன்படி சுமார் 1,000 போர்க்கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள் என தெரிகிறது. இருந்தபோதிலும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய நிபந்தனைகளில் அவர்களிடையே கருத்து முரண்கள் நீடித்த நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தினார். இதன்படி ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் பிரதமர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார், மேலும் அமைதியை அடைவதற்கான முதல் படி போர்நிறுத்தம் என்றும் அவர் தெரிவித்தார். ராணுவ ஆதரவை வலுப்படுத்துதல், உக்ரைனின் வான் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பதவியை நோக்கிய உக்ரைனின் பாதையை விரைவுபடுத்துதல் ஆகியவற்றிலும் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்: மாஸ்கோவில் ரஷிய அரசிடம் இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்!
வெள்ளி 23, மே 2025 4:37:27 PM (IST)

சீனாவில் 650 ஆண்டுகள் பழமையான கோபுரம் இடிந்து விழுந்தது: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
வெள்ளி 23, மே 2025 12:20:10 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா? ஜெய்சங்கர் விளக்கம்!
வியாழன் 22, மே 2025 5:48:39 PM (IST)

காசாவில் மக்கள் உணவின்றி தவிப்பு! மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்: போப் லியோ
வியாழன் 22, மே 2025 5:27:06 PM (IST)

இலங்கையில் இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு
புதன் 21, மே 2025 11:02:26 AM (IST)

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த தயார்: ட்ரம்புடன் பேசிய ரஷ்ய அதிபர் அறிவிப்பு!
புதன் 21, மே 2025 10:28:05 AM (IST)
