» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல் பின்னணியில் உக்ரைன் : எலான் மஸ்க் குற்றச்சாட்டு!
செவ்வாய் 11, மார்ச் 2025 12:16:46 PM (IST)
எக்ஸ் தளம் மீதான சைபர் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் சமூக வலைதளம் (டுவிட்டர்) நேற்று உலக அளவில் முடங்கியது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் எக்ஸ் தளம் முடங்கியதால் பயனாளர்கள் அவதியடைந்தனர். சுமார் 1 மணிநேர முடக்கத்திற்குப்பின் 4 மணியளவில் எக்ஸ் தளம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இது சைபர் தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது.இந்நிலையில், எக்ஸ் தளம் மீதான சைபர் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு வழங்கிவந்த ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உக்ரைன், அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசியில் முக்கிய பொறுப்பில் எலான் மஸ்க் உள்ளார். தற்போது எலான் மஸ்கின் எக்ஸ் தளம் முடக்கப்பட்ட நிலையில் இதற்கு உக்ரைன் தான் காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி: ஈரான் அரசு அறிக்கை!
புதன் 8, ஏப்ரல் 2026 10:19:15 AM (IST)

தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கைக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:34:47 PM (IST)

ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும்: டிரம்ப் மிரட்டல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:26:59 AM (IST)

பாகிஸ்தானில் மக்கள் கொந்தளிப்புஎதிரொலி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 5:10:06 PM (IST)

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் மிக உயரமான பாலம் அழிவு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:51:00 PM (IST)

பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை அமெரிக்கா எதிர்பார்க்கலாம்: ஈரான் ராணுவம் கடும் எச்சரிக்கை!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:31:27 PM (IST)

