» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடாவில் ஓடு பாதையில் சறுக்கி தலைகீழாக கவிழ்ந்த விமானம்: குழந்தை உள்பட 18 பயணிகள் காயம்!

புதன் 19, பிப்ரவரி 2025 12:12:22 PM (IST)



கனடாவில் ஓடுபாதையில் விமானம் சறுக்கியபடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 18பேர் காயம் அடைந்தனர். 

அமெரிக்காவின் மினியா போலிஸ் நகரில் இருந்து கனடாவில் உள்ள டொராண்டோ நகருக்கு டெல்டா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் (சி.ஆர்.ஜெ900) ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 76 பயணிகள், 4 ஊழியர்கள் என 80 பேர் இருந்தனர். அந்த விமானம் டொ ராண்டோ விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கி யது. அப்போது அங்கு கடும் பனிப்பொழிவு இருந்தது. 

இதில் ஓடுபாதையில் பனி படர்ந்து இருந்தது. மேலும் காற்றும் பலமாக வீசி கொண்டிருந்தது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கியபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் சறுக்கியபடி வேகமாக சென்றதால் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதில் சறுக்கியபடியே சென்ற விமானம் தலைகீழாக கவிழ்ந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் அலறினார்கள். உடனே தீயணைப்பு வாக னங்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர்.  விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர். 

தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த விமானத்தின் முன்பக்க கதவு மற்றும் அவசரகால கதவை திறந்து 80 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 18 பேர் காயம் அடைந்தனர். இதில் ஒரு குழந்தை உள்பட 3 பேரின் நிலைமை கவலை கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டொரண்டோவிலும் பனிப்புயல் வீசியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விபத்து தொடர்பாக போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory