» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்க தேசத்திற்கு மீண்டும் வருவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால்

புதன் 19, பிப்ரவரி 2025 10:55:40 AM (IST)

"வங்கதேசத்துக்கு மீண்டும் வருவேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்" என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்கதேசஅரசு கோரிக்கை விடுத்து இருந்தது. எனினும் இது தொடர்பாக இந்தியா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிளில் காணொலி வாயிலாக அவர் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், வங்கதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா உரையாற்றியதாவது: நான் திரும்பி வருவேன். அதனால் தான் அல்லா என்னை உயிருடன் வைத்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வேன். 

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நான் உதவி செய்வேன். போராட்டத்தின் போது மக்களை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெறுவதை உறுதி செய்வேன். முகமது யூனுஸ் ஆட்சி செய்ய தகுதியற்றவர். கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு யூனுஸின் ஆட்சியின் கீழ் நீதி கிடைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory