» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மெக்சிகோவில் லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து : 41 பேர் உயிரிழப்பு

திங்கள் 10, பிப்ரவரி 2025 11:19:55 AM (IST)



மெக்சிகோவில் லாரி மீது மோதியத்தில் பேருந்து தீப்பற்றிய விபத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 7பேர் படுகாயம் அடைந்தனர்.

மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு அதிகாலை நேரத்தில், 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்து தீ பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். 

இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் 7பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory