» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இஸ்ரேல் விலகல்!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 5:18:38 PM (IST)
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர், சமீபத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி வரியை விதித்து வருகிறார். அதேபோல ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக விலகுவதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்திருந்தார். இதன் மூலம், ஐநா. அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், "இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு புதிதாக போர்கள் தொடங்குவதைத் தடுப்பதற்கும் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டவும் ஐ.நா.வுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஆனால் அந்த அமைப்பில் சில துணை அமைப்புகள் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து தடம் மாறி அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகும் அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது.
மனித உரிமைகளை மீறுபவர்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பாதுகாத்து அவர்களை ஒளிந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம்,ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயகமான இஸ்ரேலை அரக்கத்தனமாக சித்தரிக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயக நாட்டைத் தாக்குவதிலும், யூத விரோதத்தைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.
எங்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், இஸ்ரேல் மட்டுமே அதற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட தனி விதிகளை கொண்ட ஒரே நாடு. இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட கண்டன தீர்மானங்களுக்கு உள்ளாகி உள்ளது. இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை. ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதை விட அதிகம். இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது" என்று அதில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி பதிவிட்டிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறு: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தொடரும் சிக்கல்
வியாழன் 13, மார்ச் 2025 11:37:48 AM (IST)

பாகிஸ்தான் ரயில் கடத்தல் மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது: 21 பயணிகள் உயிரிழப்பு
வியாழன் 13, மார்ச் 2025 10:27:03 AM (IST)

பிரதமர் மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருது: பிரதமர் நவின் ராமகூலம் அறிவிப்பு
புதன் 12, மார்ச் 2025 12:32:40 PM (IST)

பாகிஸ்தான் ரயில் கடத்தல் : 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: 104 பிணைக் கைதிகள் மீட்பு
புதன் 12, மார்ச் 2025 12:17:21 PM (IST)

போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம்: ரஷிய அதிபரும் ஒப்புக்கொள்வார் - டிரம்ப் நம்பிக்கை!
புதன் 12, மார்ச் 2025 10:32:30 AM (IST)

எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல் பின்னணியில் உக்ரைன் : எலான் மஸ்க் குற்றச்சாட்டு!
செவ்வாய் 11, மார்ச் 2025 12:16:46 PM (IST)

உண்மFeb 7, 2025 - 10:18:43 PM | Posted IP 172.7*****