» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு நீதிமன்றம் தற்காலிக தடை!
வெள்ளி 24, ஜனவரி 2025 11:46:13 AM (IST)
பிறப்புரிமை அடிப்படையில் எவரும் அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என்ற அதிபர் டிரம்ப் அறிவிப்புக்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும்போது அவர்களுக்கு அங்கு குழந்தை பிறந்தால், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை கருத்தில் கொள்ளாமல் அந்த குழந்தைக்கு தானாக அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்ட நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் டிரம்ப்பின் அறிவிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில், இனி அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் எவரும் அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது. அதே போல், அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்டு இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது. இந்த உத்தரவு பிப்ரவரி 20-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் ஆகிய மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, டிரம்ப்பின் அறிவிப்புக்கு தற்காலிக தடை விதித்து சியாட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி டிரம்ப்பின் உத்தரவை அமல்படுத்துவதற்கு 14 நாட்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப்பின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். அமெரிக்க குடியுரிமை சட்டங்களை மறுவரையறை செய்யும் டிரம்பின் முயற்சிக்கு இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)

எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: சீனா அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:41:09 PM (IST)

கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்ல நேரிடும்: எலான் மஸ்க்குக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:35:48 PM (IST)

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)

மனைவி விவாகரத்தால் விரக்தி : ஓடும் ரயிலுக்குள் தீவைத்த 67 வயது நபர் கைது!
சனி 28, ஜூன் 2025 12:23:38 PM (IST)
