» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தென்கொரிய முன்னாள் அதிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:25:46 AM (IST)

தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்திய முன்னாள் அதிபர் யூன் சக் இயோல்-க்கு உச்ச நீதிமன்றம் சாகும்வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
தென்கொரியாவில் முன்னாள் அதிபர் யூன் சக் இயோல், அதிகாரத்தைத் தக்கவைக்க ராணுவ ஆட்சியை அமல்படுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டார். சியோல் உச்ச நீதிமன்றம் இதனை "மிகப்பெரிய தேசத்துரோகம்" எனக் குறிப்பிட்டு, அவருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
ராணுவச் சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அவர் பதவியிழந்தார். உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாததால் மரண தண்டனைக்கு பதிலாக இத்தண்டனை வழங்கப்பட்டது. இந்தச் சதிக்கு உதவிய முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு 30 ஆண்டுகளும், முன்னாள் பிரதமருக்கு 23 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்: ஹாக்கி விளையாட்டின் போது துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி!
புதன் 18, பிப்ரவரி 2026 12:10:02 PM (IST)

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பில்லை - டொனால்ட் டிரம்ப் விளக்கம்!
புதன் 18, பிப்ரவரி 2026 8:37:37 AM (IST)

இம்ரான் கானுக்கு முறையான சிகிச்சை: பாகிஸ்தான் அரசுக்கு கபில் தேவ், சுனில் கவாஸ்கர் கடிதம்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:05:34 PM (IST)

இந்தியா குறித்து முகமது யூனுஸின் சர்ச்சை பேச்சு: பிரியாவிடை உரையில் பரபரப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:30:15 PM (IST)

சூடான் உள்நாட்டுப் போரில் ஒரே வாரத்தில் 6,000 பொதுமக்கள் படுகொலை: ஐ.நா. கடும் கண்டனம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:28:53 PM (IST)

வடகொரியாவின் அடுத்த வாரிசு: மகள் கிம் ஜு ஏ-வை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!
சனி 14, பிப்ரவரி 2026 4:33:55 PM (IST)

