» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 56 பேர் பலி: ஆப்பிரிக்க நாட்டில் சோகம்!!

செவ்வாய் 3, டிசம்பர் 2024 8:36:26 AM (IST)



ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 56 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் மமதி டூம்பூயா தலைமையிலான ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அவரை கவுரவப்படுத்தும் வகையில் கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜெரேகோர் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெரேகோர் மற்றும் லேப் அணிகள் மோதின. இந்த போட்டியைக் காண ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் அங்கு திரண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் நடுவர் திடீரென சர்ச்சைக்குரிய முடிவை கூறினார்.

இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த ஜெரேகோர் அணி ரசிகர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

எனினும் இந்த கலவரத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 56 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மமாடோவ் அவுரி பா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory