» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு எப்போதும் ஆதரவு : வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உறுதி

ஞாயிறு 1, டிசம்பர் 2024 9:41:56 AM (IST)

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷியாவுக்கு தனது ஆதரவை அளிக்கும் என அந்த நாட்டின் அதிபர்  கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளது. அதன்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது. இதற்கிடையே ரஷியாவுக்குள் நீண்ட தூர ஏவுகணையை தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷியா தனது நாட்டின் அணு ஆயுத கொள்கையை மாற்றியது.

அதாவது தங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல் நடத்தினாலே அணு ஆயுதத்தை பயன்படுத்தப்படும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இதனால் மூன்றாவது உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கவலை தெரிவித்தன. இந்தநிலையில் ரஷிய ராணுவ மந்திரி ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினர்.

அப்போது கிம் ஜாங் அன் கூறுகையில், `நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும். எனவே உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷியாவுக்கு தனது ஆதரவை அளிக்கும்' என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory