» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

திங்கள் 18, நவம்பர் 2024 5:48:24 PM (IST)

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். மேலும், அதிபர் திசநாயகா முன்னிலையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.

கடந்த 14-ந் தேதி நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரா குமார திசநாயகாவின் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றது. இதையடுத்து, இலங்கையின் புதிய மந்திரிசபை இன்று பதவியேற்றது. அதிபர் செயலகத்தில் அதிபர் திசநாயகா முன்னிலையில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

விழாவில் இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். மேலும் அதிபர் திசநாயகா முன்னிலையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. இதில் இலங்கையின் வெளிவிவகாரத் துறை மந்திரியாக விஜித ஹேரத் பதவியேற்றுக் கொண்டார். மகளிர் மற்றும் சிறுவர் நலத் துறை மந்திரியாக சரோஜா சாவித்திரி பால்ராஜ் பதவியேற்றார்.

கடற்தொழில் நீரியல் வழங்கல் மந்திரியாக ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றார். இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory