» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காசாவில் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சவுதி இளவரசர் கடும் எச்சரிக்கை!

செவ்வாய் 12, நவம்பர் 2024 12:11:46 PM (IST)

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை சவுதி அரேபியா, இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்காது. உடனே இப்போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என சவுதி இளவரசர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதியின் ரியாத்தில் அரபு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்தது. இதில் முகமது பின் சல்மான் பேசியதாவது: காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை சவுதி அரேபியா, இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்காது. உடனே இப்போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.

அதேபோல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலையும் கண்டிக்கிறோம். இதுதவிர இஸ்ரேல் ஈரானை குறிவைக்கிறது. இதை தடுத்து ஈரானின் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும். பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் உள்ள நமது சகோதரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளை தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே வடக்கு இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனாலும், சில ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் விழுந்து வெடித்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து

ஆனந்த்Nov 13, 2024 - 10:44:02 AM | Posted IP 162.1*****

அமெரிக்காவுக்கு ஜால்ரா அடிக்கும் உனக்கு இஸ்ரேலை கண்டிக்க உரிமை இல்லை சமூக

முல்லாNov 12, 2024 - 06:07:36 PM | Posted IP 172.7*****

குசுபுல்லா தீவிரவாதிகள், ஹமாஸ் தீவிரவாதிகள் எதுக்கு அப்பாவி மக்களை கொன்றார்கள்? அங்குட்டு வேடிக்கை பார்த்துட்டு இரு பாய்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory