» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் டிரம்ப் முன்னிலை - கமலா ஹாரிஸ் பின்னடைவு!
புதன் 6, நவம்பர் 2024 10:10:08 AM (IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் காலை 8.30 மணி நிலவரப்படி(இந்திய நேரம்) குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
இதுவரையில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்தான் முன்னிலை பெற்றுள்ளார்; ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவில் உள்ளார்.
மொத்தம் 50 மாகாணங்களில் 538 பிரதிரிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வெற்றி பெற 270 பிரதிநிதிகள் தேவை. காலை 8.30 நிலவரப்படி, டிரம்பின் குடியரசு கட்சியின் 188 வேட்பாளர்களும், ஜனநாயகக் கட்சியின் 99 வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.
இதுவரை வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதில், இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, ஓக்லஹோமா, மிஸௌரி, டென்னிஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ், தெற்கு டகோடா, வடக்கு டகோடா உள்ளிட்ட 17 மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.
வெர்மோன்ட், மேரிலாண்ட், மசாசுசெட்ஸ், கொலம்பியா, இல்லினொய்ஸ், நியூ ஜெர்ஸி, நியூ யார்க் உள்ளிட்ட 9 மாகாணங்களில் கமலா வெற்றி பெற்றுள்ளார். வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 52.4 சதவிகிதமும், கமலா ஹாரிஸ் 46.4 சதவிகிதமும் பெற்றுள்ளனர். கலிஃபோர்னியா, வாஷிங்டன், அரிசோனா, ஓரிகான் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்
ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)
