» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எங்களை சீண்டினால் அணுகுண்டு வீசுவோம் : தென் கொரியாவுக்கு கிம் எச்சரிக்கை
சனி 5, அக்டோபர் 2024 10:40:05 AM (IST)
எங்களை சீண்டினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தென் கொரியாவுக்கு வடகொரியா அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியாவும் பல்வேறு கூட்டு ராணுவ பயிற்சிகள் மற்றும் ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.இதனிடையே தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற ராணுவ தினத்தின்போது அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் பேசுகையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா-தென் கொரியா கூட்டு ராணுவப்படை தகுந்த பதிலடியை கொடுக்கும் எனவும், வடகொரிய அதிபர் கிம்மின் ஆட்சி விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் எச்சரித்தார்.
இந்த நிலையில், வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரி நாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு தென் கொரிய அதிபரின் பேச்சை கடுமையாக விமர்சித்த அவர், பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியை யார் அழிக்கிறார்கள் என்பதை இந்தக் கருத்து காட்டுகிறது என்றார். மேலும் தென் கொரியா தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் கிம் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:11:03 AM (IST)

டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்
திங்கள் 22, டிசம்பர் 2025 10:20:10 AM (IST)

வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து வன்முறை: இந்தியாவுக்கு எதிராக போராட்டம் தீவிரம்!
சனி 20, டிசம்பர் 2025 10:46:38 AM (IST)

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)


.gif)