» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இம்ரான் கானை விடுவிக்க கோரி போராட்டம்: தெரீக்-இ-இன்சாப் கட்சியினர் 700 பேர் கைது!

வெள்ளி 4, அக்டோபர் 2024 12:40:09 PM (IST)



பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க கோரி போராட்டம் நடத்திய தெரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஆண்டு 2023, ஆகஸ்ட் 5 முதல் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுவிக்க வலியுறுத்தி அவரது கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டமும் அந்நாட்டில் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

இம்ரான் கானை, சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும், விலைவாசியை கட்டுப்படுத்தக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் போராட்டங்களால் பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

மேலும், "இனிமேலும் காத்திருக்க மாட்டோம், பொறுமையாக இருக்க மாட்டோம். எங்களை கட்டுப்படுத்த முடியாது. நாட்டிற்காக போராட தயாராக உள்ளோம். வெற்றியோ அல்லது தோல்வியோ எங்கள் போராட்டத்தை வலுப்படுத்துவோம்" என்று இம்ரான் கான் கட்சியின் நிர்வாகிகள் கூறினர்.  இதனால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory